கோவையில் 16 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பிரபல ரவுடி

கோவையில் 16 வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ரவுடியைப் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவையில் பல்வேறு கொலை, கொள்ளை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜோஸ்வா என்பவர் சில மாதங்களுக்கு முன்பு 16வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி மாயமானதை அடுத்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல ரவுடி ஜோஸ்வாவைக் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஜோஸ்வாவைக் கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்ஸோ மற்றும் ஆட்கடத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version