அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் அமைப்பதற்காக அவசர நிலையை பிரகடனப்படுத்திய அதிபர் டிரம்புக்கு எதிராக 16 மாகாணங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.
அமெரிக்காவில் குடியேறும் அகதிகளை தடுப்பதற்காக மெக்சிகோவை ஒட்டிய எல்லைப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக அந்நாட்டில், அவரச நிலையை டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கலிஃபோர்னியா, நியூ ஜெர்சி, நியூ யார்க் உட்பட 16 மாகாணங்கள், டிரம்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. டிரம்பின் அவசர நிலை அறிவிப்பு, அதிபரின் அதிகாரங்களை மீறிய செயல் என்றும் பிற நோக்கங்களுக்காக அரசு ஒதுக்கி வைத்திருக்கும் நிதியை சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்வதாகவும் அம்மாகணங்கள் குற்றம் சாட்டியுள்ளன.