16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி: இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்

16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகிறது.

14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை நடக்கிறது.16 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டி 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில், மாலை 5 மணிக்கு, பெல்ஜியம்-கனடா அணிகள் மோத உள்ளன.

இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய அணிகள் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version