மத்தியப்பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா

மத்தியப்பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், கமல்நாத்துக்கு எதிராக காங்கிரசில் கிளர்ச்சி வெடித்துள்ளது. அவரது அமைச்சரவையில் உள்ள ஆறு அமைச்சர்கள் உட்பட 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூருவுக்கு வந்துள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால்  மத்திய பிரதேச அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றியதை போலவே மத்திய பிரதேசத்திலும் பாஜக காய் நகர்த்துவதாக தகவல்கள் வெளியாகின. அதன் ஒரு பகுதியாக பாஜகவுக்கு ஆதரவாக ஆறு அமைச்சர்கள் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேர் டெல்லியில் இருந்து பெங்களூரு வந்தடைந்தனர். இந்நிலையில் மத்தியப்பிரதேச முதலமைச்சர் கமல்நாத் உடனான சந்திப்பில் கலந்து கொண்ட 16 அமைச்சர்களும், ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த அமைச்சர்களின் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version