தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 1500 சிலைகள் மீட்பு !

தமிழக கோவில்களில் இருந்து காணாமல் போன 1500க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக, சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில், உலோக திருமேனி பாதுகாப்பகம் அமைந்துள்ளது. இங்கு திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 359 சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள சிலைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல், தமிழக கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். வெளிநாடுகளில் இருந்து 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version