திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட ஆயிரத்து 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப் படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, நகராட்சி ஆணையர் சுரேந்திரன் உத்தரவின்பேரில் சிவன்படவீதி, காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் ஆயிரத்து 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் இந்த அபராதம் மேலும் உயர்த்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.