திருச்சியில்15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் உள்பட 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக செல்வராஜ் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் புலிவலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை 7 மாதமாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திமுக பிரமுகர் செல்வராஜ் உள்பட அப்பகுதியை சேர்ந்த 4 பேரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….