உலக முதலீட்டாளர் மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூ.15,000 கோடி அளவு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிச் சேனல்களுக்கான பேக்கேஜ் தொடங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மணிகண்டன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மாணவர்களுக்கு தரமான மடிகணினி வழங்கும் வகையில் வெப் கேமரா, வை ஃபை உள்ளிட்ட புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக சிங்கப்பூர் சென்று பல்வேறு நிறுவனங்களை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார்.
பல கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்துக்கு முதலீடுகள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் மணிகண்டன், செட்டாப் பாக்ஸ் கேட்டு 43 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டார். இதுவரை 36 லட்சம் செட்டாப் பாக்ஸ் வாங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.