ATM-ல் கொள்ளையடிக்க முயன்ற 14வது சிறுவன்

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயற்சித்த 14 வயது சிறுவனை பிடித்த பொதுமக்கள், அவனை காவல்துறையில் ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோயில் இரயில் நிலையம் செல்லும் வழியில் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் உள்ளது. இங்கு, அதிகாலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்ற 14 வயது சிறுவன், திருட முயற்சிப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இதனையடுத்து சிறுவனை பிடித்த பொதுமக்கள், மறைமலைநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுவனிடம் நடைபெற்ற விசாரணையில், ஏற்கனவே பல இடங்களில் இது போன்ற கொள்ளை முயற்சியில் அவன் ஈடுபட்டிருந்ததும், கடந்த வாரம் தான் சீர்திருத்த பள்ளியிலிருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.

Exit mobile version