மதுரையில் 1492 பவுன் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சிசிடிவி காட்சி கிடைத்துள்ளது. கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேன் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை நரிமேடு பகுதியில் உள்ள அடகு கடை ஒன்றில் இருந்து சுமார் 1492 பவுன் நகை மற்றும் ஒன்பது லட்ச ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கடந்த மாதம் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வழக்கின் முக்கிய திருப்பமாக, நகைகளை கொள்ளையடிக்க பயன்படுத்த மினி வேன் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மினி வேனின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.