ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வந்தது. தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் யாஷவி ஜெய்ஸ்வாலின் 85 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 305 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய இலங்கை அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 35 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.