புயல் நிவாரணப் பணிகளுக்காக 1,401 கோடி ரூபாய் ஒதுக்கீடு -தமிழக அரசு

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக 1,401 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, தெரிவித்துள்ளது.

கஜா புயல் பாதிப்பிற்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சகம் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கஜா புயலினால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இறந்த மாடு மற்றும் எருமைக்கு தலா 30 ஆயிரமும் ஆட்டுக்கு 3 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 10 கிலோ அரிசி,இலவச வேட்டி, சேலை நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. படகுகளை இழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. புயல் நிவாரணப் பணிகளுக்காக 1,401 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் நிவாரணத்துக்காக மத்திய அரசு 353 கோடியே 70 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புயல் பாதித்த அனைத்து பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இதையடுத்து வரும் இந்த வழக்கை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Exit mobile version