அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,400 காளைகள் பதிவு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 1400 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 17-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கென கடந்த 12-ம் தேதி 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் அங்கு துவங்கியுள்ள நிலையில், காளைகளுக்கான அனுமதி சீட்டு வழங்கும் பணி நடைபெற்றது.

இதற்கென திருச்சி, கோவை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான காளை உரிமையாளர்கள் அதிகாலை முதலே வருகை தந்தனர்.

காளைக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்த மருத்துவ சான்று, ஆதார் அட்டை, காளையுடன் உரிமையாளர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பித்து காளைகளின் உரிமையாளர்கள் இந்த அனுமதி சீட்டினை பெற்றனர். மாலை 3 மணியுடன் நிறைவடைந்த காளைகள் முன்பதிவில், மொத்தம் ஆயிரத்து 400 காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version