ஜம்மு காஷ்மீரில் கடந்த 6 மாதங்களில் 140 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரையில், ஜம்மு காஷ்மீரில் 19 தீவிரவாத வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், 426 கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 34 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில், தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 171 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு 167 வீரர்களும், 2018ஆம் ஆண்டு 163 வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.