14 வயது சிறுமிக்கு நடைபெற்ற திருமணம் செல்லும் பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாநிலத்தில் 14 வயதுடைய கிறிஸ்தவ சிறுமி மதம் மாற்றி திருமணம் செய்தாலும் அது ஷரியத் சட்டத்தின் படி செல்லுபடியாகும் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் யூனுஸ், நஹினா மஷி. இவர்களின் மகள் ஹுமா வயது 14. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்துல் ஜப்பார் என்பவர் ஹுமாவை கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்து, வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் சிந்து மாநில உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தன. வழக்கைக் கடந்த 3-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் இக்பால் கல்ஹூரோ, இர்சத் அலி ஆகியோர் முஸ்லிம்கள் ஷரியத் சட்டப்பட்டி இந்த திருமணம் செல்லுபடியாகும் எனக் கூறித் தீர்ப்பளித்தனர்.

இந்த வழக்கில் சிறுமியின் பெற்றோர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் தபாசும் யூசுப் ” இந்த திருமணம் கடந்த 2014-ம் ஆண்டு சிந்து மாநில குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்துக்கு விரோதமாக இருக்கிறது. 18வயதுக்கு கீழ்பட்ட இந்து, கிறிஸ்தவ பெண்களைக் கட்டாயத் திருமணம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த சிறுமிக்கு முதல் மாதவிடாய் சுழற்ச்சி வந்திருந்தாலும் அந்த திருமணம் செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்று கூறினார்.

Exit mobile version