அமலுக்கு வந்தது 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : மீறுவோருக்கு சிறை தண்டனை

தமிழகத்தில் இன்று முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், தடையை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் என 14 வகையான பொருட்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பால், தயிர், எண்ணைய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தடையை மீறிவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version