கர்நாடகாவில் இன்று முதல் 14 நாள் ஊரடங்கு அமல்

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இன்று முதல் 14 நாள் ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேர ஊரடங்கும், சனி ஞாயிறுகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

ஆனால் தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதை அடுத்து, மாநிலம் முழுவதும் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இன்று இரவு 9 மணிமுதல் மே 12ஆம் தேதி வரை அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவகங்கள், விடுதிகள், அரங்கங்கள், நீச்சல் குளங்கள் இயங்க அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் காலை 6 மணிமுதல் 10 மணிவரை அனுமதிக்கப்படும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version