சேலம் அருகே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், ஓமலூர் பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கண்டெயினர் லாரி ஒன்றில், அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது அதில், 100 அட்டை பெட்டிகளில் ஆயிரத்து 360 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு 15 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரியையும் பறிமுதல் செய்தனர்.
Discussion about this post