ஒரு சாதாரண மனிதனால் 3 அல்லது 4 மொழிகளில் சரளமாகப் பேசவும், எழுதவும் முடியும். ஆனால் 13 வயது சிறுவன் 400 மொழிகளில் வல்லமை பெற்று உள்ளான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மஹ்மூத் அக்ரம். இவருக்கு வயது 13. இவரால் 400 மொழிகளில் எழுதவும், படிக்கவும் சரளமாக தட்டச்சு அடிக்கவும் முடியும்.மேலும் 46 மொழிகளில் பேசி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இவரை பற்றி தெரிந்து மேலை நாடுகள் தங்கள் நாட்டில் வசிக்கக் குடியுரிமை தருகிறோம் என்று அழைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
world youngest multilanguage விருது, ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியின் கேகன் கோர்ஸ் நிகழ்ச்சியின் டைட்டில் இப்படி பல சாதனைகளை படைத்துள்ளார் இந்த சிறுவன்.
இவரின் திறமையை அறிந்த ஆஸ்திரியாவில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்று , அங்கு படிப்பதற்கு அழைத்துள்ளது . அதோடு குடும்பத்தின் அனைத்து செலவுகளையும் ஏற்பதாக அறிவித்து உள்ளது.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற போட்டி ஒன்றில் குரானின் முதல் அத்தியாயத்தை 180 மொழிகளில் 6 மணி நேரத்தில் தட்டச்சு செய்து சாதனை படைத்தார். இதனால் அந்த நாட்டில் 10 ஆண்டுகளில் வசிப்பதற்கான குடியுரிமையும் அந்நாட்டு அரசு வழங்கியது.
இப்படி பல மொழிகளில் வல்லமை வாய்ந்த சிறுவனை மேலை நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு அந்நாட்டில் வசிப்பதற்கான குடியுரிமை கொடுத்தாலும்,சிறுவனின் பெற்றோர்கள் இந்தியாவுக்கு தான் பெருமை சேர வேண்டும் என அந்த வாய்ப்புகளை நிராகரித்து வருகின்றனர். மேலும் இந்த சிறுவன் பல பள்ளிகளில் தற்போது motivational speaker ஆக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.