ஓசூர் அருகே கிராம பகுதிகளில் 2வது நாளாக சுற்றிவரும் 13 காட்டு யானைகள்

ஓசூர் அருகே கிராம பகுதிகளில் இரண்டாவது நாளாக சுற்றிவந்த 13 காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சானமாவு வனப்பகுதியில் 20 காட்டுயானைகள் சுற்றிவந்தன. அவற்றிலிருந்து பிரிந்த 13 காட்டுயானைகள் ஒரு குழுவாக ஓசூர் அருகே உள்ள ஒன்னல்வாடி ஏரியின் அருகே முகாமிட்டிருந்தன. இந்தநிலையில் இரண்டாவது நாளாக கிராம பகுதிகளை சுற்றிவரும் காட்டுயானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, 20க்கும் மேற்ப்பட்ட வன ஊழியர்கள் யானைகளை போராட வனப்பகுதிக்குள் விரட்டியடித்துள்ளனர். மேலும் கிராம மக்கள் கால்நடைகள் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், இரவு நேர பயணங்களை தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version