தமிழகத்தில் மக்களவை தேர்தலில் மறு வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ள 13 வாக்குச்சாவடிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்ற 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வாக்குசாவடிகளில் வரும் 19 ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி திருவள்ளூர் தொகுதி மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பபள்ளி வாக்குச்சாவடி எண் 195 ல் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தருமபுரி தொகுதியில் 181,182, ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
அதேபோல தருமபுரி தொகுதி நத்தமேடு 192,193,194,195, 196,197 ஆகிய வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும். தேனி தொகுதியில் வடுகபட்டி சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 67, மற்றும் பாலசமுத்திரம் அரசு ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடி எண் 197 லும் மறுவாக்குப்பதிவு நடைபெறும்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை நகராட்சி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண்210லும் காங்கேயம் அடுத்துள்ள திருமங்கலம் 248 வது வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.