நிலச்சரிவில் 13 பேர் உயிரிழப்பு; 30 பேரை தேடும் பணி தீவிரம்

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.

கின்னார் மாவட்டத்தில், ரெக்காங் பியோ – சிம்லா நெடுஞ்சாலையில் மதியம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, மலைப்பாதையின் சாலையில் சென்ற 40 இருக்கைகள் கொண்ட பேருந்து, ஒரு கனரக வாகனம், 4 கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன. 

இடிபாடுகளில் இருந்து 14 பேர் உயிருடனும், 13 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். மண்ணில் புதைந்து காணாமல் போன 30க்கும் மேற்பட்டோரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. காவல்துறை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்தோ-திபெத் காவல் படையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூரை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், மீட்பு பணிகளில் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தனர்.

 

Exit mobile version