தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அனல் காற்று அதிகரிக்கும்- வானிலை மையம்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளநிலையில், 13 மாவட்டங்களில் அனல் காற்று அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் நேற்று தொடங்கியுள்ளது. வரும் 29ஆம் தேதி வரை கடுமையாக வெப்பம் நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனிடையே கத்தரி வெயில் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபானி புயல் நீர் காற்றை இழுத்துச் சென்றதே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும், அதிக நீர்ச் சத்துள்ள பழங்களை உட்கொள்ள வேண்டும், இயற்கை சார்ந்த பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version