12ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியீடு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது

இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலை முதலாமாண்டு அரியர் மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் நாளை பிற்பகல் 2 மணிக்கு Scan.tndge.in. என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் அன்றைய தினமே www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version