ராமநாதபுரம் அருகே துணிக்கடை உரிமையாளர் வீட்டில், 126 சவரன் நகைகள் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை பகுதியை சேர்ந்த குத்புதீன் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி உம்முள் நசீரா உள்ளிட்டோர் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில், பீரோவில் இருந்த 126 சவரன் நகைகள் மாயமானதாக கூறி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பூட்டு உடைக்க படாத நிலையில், வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே நகைகள் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.