123 கோடி பேருக்கு ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர்அவர், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியே 8 லட்சத்து 54ஆயிரத்து 977 என்று குறிப்பிட்டார்.
2018ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 122 கோடியே 90 லட்சம் பேருக்கு ஆதார் கார்டுகளை வழங்கியுள்ளதாக அவர் கூறினார். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளில் 6 கோடியே 71 லட்சம் ஆதார் கார்டுகளும், 5 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 29 கோடியே 2 ஆயிரம் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளதாக ஹன்ஸ்ராஜ் தெரிவித்தார்.