தமிழகத்தில் கடந்த 30 நாட்களில் கொரோனா தொற்றால் 12,000 பேர் உயிரிழப்பு

 

தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் அரசு மெத்தன போக்குடன் செயல்பட்டதே இதற்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட தொடங்கியதில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரை 13 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த 30 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல கடந்த 30 நாட்களில் மட்டும் கொரோனா தொற்றால் 12 ஆயிரத்து 33 பேர் பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார துறை வெளியிட்டு இருக்கும் புள்ளி விபரங்கள் படி தெரியவந்துள்ளது. திமுக அரசின் நிர்வாக குறைபாடே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்துறையின் அலட்சியம் காரணமாக ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் படுக்கை வசதிகளுக்கு கடும் கட்டுப்பாடு நிலவியது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் ஆம்புலன்களிலேயே செத்து மடியும் நிலை ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆக்சிஜன் இருப்பு இல்லாமல் நோயாளிகள் கொத்து கொத்தாக மாண்டனர். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மருத்துவ கட்டமைப்பை வலுபடுத்துவதில் திமுக அரசு மெத்தனம் காட்டியதே, கொரோனாவின் பிடியில் தமிழகம் சிக்கியதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version