பென்ஷன் வழங்க 120 வயது மூதாட்டியை நேரில் வரக்கோரிய வங்கி அதிகாரி பணியிடை நீக்கம்!

ஒடிசா மாநிலத்தில், முதியோர் உதவித் தொகை பெறுவதற்காக, 120 வயது மூதாட்டியை நேரில் வரவழைத்த சம்பவத்தில், வங்கி மேலாளர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நவ்பாடா மாவட்டத்தைச் சேர்ந்த குஞ்சா தேய் என்ற 70 வயது பெண், 120 வயதான தனது தாயின் முதியோர் உதவித்தொகையை பெறுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் உதவித்தொகையை தரமறுத்த வங்கி ஊழியர், அவரது தாயை நேரில் அழைத்து வந்தால் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என உறுதியாக கூறினார். இதனால் வேறுவழியின்றி, தனது தாயை கட்டிலில் படுக்க வைத்து, கட்டிலை சாலையில் இழுத்துக்கொண்டு வங்கிக்கு வந்தார். குஞ்சா தேய், தனது தாயை இழுத்து வந்த காட்சிகள், சமூக வலை தளங்களில் வேகமாக பரவின. பல்வேறு தரப்பினரும் வங்கி ஊழியருக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில், மூதாட்டியை அழைத்து வரக் கூறிய வங்கி ஊழியர் மற்றும் மேலாளரை பணியிடை நீக்கம் செய்து, வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநில அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version