முதலமைச்சர் தலைமையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்கள்

அமமுக-வில் இருந்து விலகி 120 பேர் அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் இருந்தவர் K.T. பச்சைமால். இவரது தலைமையில் அமமுகவில் இருந்து பிரிந்த சுமார் 120 பேர், சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

முன்னதாக அமமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட அனைவரும் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும், முதலமைசருக்கு சால்வை அணிவித்தும், மலர் கொத்துக் கொடுத்தும் மகிழ்ந்தனர்.

Exit mobile version