12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மொத்தம் ஏழு லட்சத்து 40 ஆயிரத்து 400 மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
சென்னையை பொறுத்தவரை, இரண்டு கட்டங்களாக செய்முறை தேர்வுகள் நடைபெறுகின்றன.
முதல் கட்டமாக இன்று துவங்கும் தேர்வில், 206 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 904 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இரண்டாம் கட்டமாக 204 பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 528 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மேலும், செய்முறை தேர்வின்போது வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
செய்முறை தேர்வில் செய்முறைக்கான மதிப்பெண்கள் மற்றும் அகமதிப்பீடு மதிப்பெண்கள் ஆகியவை முதன்மை கண்காணிப்பாளர் முன்னிலையில் பதிவிட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.