கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத 11,200 !!- ரூ.4 கோடி பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீஸ்!

விழுப்புரம் மாவட்டத்தில், பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில், விவசாயிகள் என்று கூறி மோசடி செய்தவர்களிடன் இருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதித்திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய், 3 தவணைகளாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட 70 ஆயிரம் பேரில், விவசாயிகள் என்று கூறி போலியாக 42 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களில் 8 ஆயிரம் பேர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மோசடியாக சேர்ந்தவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் உள்ள தொகை திரும்ப பெறப்பட்டு அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதுவரை 11 ஆயிரத்து 200 பேரின் வங்கி கணக்குகளில் இருந்து, தலா 4 ஆயிரம் ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. அந்தவகையில், 4 கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version