செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து 11 நோயாளிகள் உயிரிழப்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, நேற்று இரவு, 11 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, நேற்று இரவில் அடுத்தடுத்து11 நோயாளிகள் உயிரிழந்த தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆக்சிஜன் கையிருப்பு இருந்ததாகவும், இதை எதிர்பாராத இறப்பாக கருதுகிறேன் என்றும் தெரிவித்த அவர், நோயாளிகள் உயிரிழப்பு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதி அளித்தார்.

Exit mobile version