அதிமுக அரசின் கோரிக்கையை அடுத்தே, மத்திய அரசு தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்ததாக, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய அவர், அதிமுக அரசின் முயற்சியால், தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வந்ததால், 2011-ல் ஆயிரத்து 940-ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை, தற்போது 5 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். அதிமுக அரசின் முயற்சியாலேயே, ஆண்டுதோறும் 5 ஆயிரத்து 200 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருவதையும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
https://www.youtube.com/watch?v=zQa9AFe6wmE
இதனிடையே, சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களில், மாவுப்பூச்சியின் தாக்குதலால் மரவள்ளிக் கிழங்கு பயிர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி, உற்பத்தி குறைந்து, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதனால், உடனடியாக வேளாண்துறை அதிகாரிகளை அப்பகுதிகளுக்கு நேரடியாக அனுப்பி, தேவையான நிதியினை ஒதுக்கி, பூச்சி மருந்து தெளித்து, மாவுப்பூச்சி பாதிப்பிலிருந்து மரவள்ளிக் கிழங்கு பயிரிட்ட விவசாயிகளை காக்க வேண்டும் என்று தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டார்.
https://www.youtube.com/watch?v=nL2ubV5fPgM