உயர் கல்வித்துறை சார்பில் 25 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறையின் கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அரியலூர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 23 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் இதரக்கட்டடங்களை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதேபோல், சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 21 கோடியே 55 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசுக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக கட்டடங்களையும் முதலமைச்சர் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைதியநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.