ஜூன் 15 முதல் 25ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி 10ஆம் வகுப்பு பொத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளார்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 15 முதல் 25ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார். அதன்படி, ஜூன் 15ம் தேதி மொழிப்படமும், 17ம் தேதி ஆங்கில தேர்வும் நடைபெறும் என்றும் கணிதம் 19ம் தேதியும், விருப்பப் பாடம் 20ம் தேதியும்,22ல் அறிவியல் தேர்வும் நடைபெறும் என்று தெரிவித்தார். சமூக அறிவியல் தேர்வு 24ம் தேதியும், 25ம் தேதி தொழிற்பாடத்துக்கான தேர்வும் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். மேலும் மாணவர்கள் தேர்வு எழுதும் மையம் 5 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே அமையும் என்றும் கூறினார்

Exit mobile version