108 தகவல் மைய ஊழியரின் காட்டமான பேச்சு ; சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஆடியோ

தருமபுரி மாவட்டத்தில் ஆம்புலன்ஸுக்காக நீண்ட நேரம் காத்திருப்பதாக கூறி, 108 தகவல் மையத்தை தொடர்பு கொண்ட நபரிடம், ஊழியர் அலட்சியமாக பேசியுள்ளார்.

“உரையாடலை பதிவு செய்தால் பயந்து விடுவோமா?” என 108 தகவல் மைய ஊழியர் காட்டமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலக்கோடை சேர்ந்த தீயணைப்புத்துறை ஊழியர் மகேந்திரன்.

இவரது தாயார் உடல் நல குறைவு காரணமாக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.

இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியதால்,108 அம்புலன்ஸுக்கு தகவல் அளித்துள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால், 108 தகவல் மையத்தை மகேந்திரன் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, 108 தகவல் மைய ஊழியர்கள் அலட்சியமாக பேசியதுடன், “உரையாடலை பதிவு செய்தால் பயந்து விடுவோமா?” என காட்டமாக பேசியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ பதிவு வெளியாகி பொதுமக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

https://youtu.be/vCIYtOym62Q 

Exit mobile version