தமிழகத்தில் 1,075 பேருக்கு பாதிப்பு!

சென்னையில் புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது. ஈரோட்டில் 64 பேரும், திருப்பூரில் 60 பேரும், திண்டுக்கல் மற்றும் நெல்லையில் தலா 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் 45 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருச்சியில் தலா 43 பேரும், தேனியில் 41 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டையில் 39 பேருக்கும், திருவள்ளூரில் 29 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கரூர் மற்றும் மதுரையில் தலா 25 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 24 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version