மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் தெரிவித்துள்ளது, அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாகவும், தன்னிடம் அவர்கள் தொடர்பில் இருப்பதாகவும் அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2017-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முகுல் ராய் பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் சமீபத்தில் ராஜினாமா செய்து, பாஜகவில் இணைந்து வரும் நிலையில், முகுல் ராயின் கருத்தால் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.