மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,500 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்தநிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நிலையில், இன்று வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி யாகவும் உள்ளது. பாசனத்துக்காக வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

Exit mobile version