மாணவர் சேர்க்கை இல்லாததால் 102 பொறியியல் பாடங்கள் நிறுத்தம்

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவிலான மாணவர் சேர்க்கை இல்லாததால்,102 பொறியியல் பாடங்களை நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நிறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 62 முதுநிலை பொறியியல் பாடங்கள் உள்பட 102 பாடங்களில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், நானோ சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஏற்கனவே 50 கல்லூரிகள், 97 பொறியியல் பாடங்களை ரத்து செய்துள்ளதாகவும், 17 கல்லூரிகள் சிவில் இன்ஜினியரிங் படிப்பை நிறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை இல்லாததால், கோவை மாவட்டத்தில் 3 கல்லூரிகள் உள்பட 4 கல்லூரிகளை மூட அனுமதி கேட்டுள்ளதாகவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கூறியுள்ளது.

Exit mobile version