அடுத்த மாதத்தில் இருந்து 100 யூனிட் மின்சாரம் பலருக்கு ரத்தாக வாய்ப்பு!

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் மக்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் ஆதாரை இணைத்தவர்களின் தரவுகள் பதிவாகாததால் ஆதாரை மீண்டும் இணைக்குமாறு நுகர்வோருக்கு மின்சார வாரியம் தகவல் அனுப்பி உள்ளது. ஆதார் இணைப்புக்கான அவகாசம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளவர்களுக்கும், அதிக வருமானம் உள்ளவர்களுக்கும்100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய விடியா அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது தானாக முன்வந்து இலவச மின்சாரம் வேண்டாம் என எழுதி கொடுக்குமாறு நுகர்வோரை நிர்பந்திக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் நாளையுடன் ஆதார் இணைப்புக்கான அவகாசம் நிறைவடையும் நிலையில் மேலும் நீட்டிக்கப்படாது என தெரிகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை நாளைக்குள் அனைவரும் இணைத்துக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை 87 சதவீதம் பேர் ஆதாரை இணைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அடுத்த மாதத்தில் இருந்து 100 யூனிட் மின்சாரம் பலருக்கு ரத்தாக வாய்ப்பு உள்ளது.

Exit mobile version