புதுச்சேரியில் ஜல்லிகட்டு என்ற உணவகத்தை நடத்தி வரும் கிராமத்து இளைஞர் ஒருவர், 100 திருக்குறளை ஒப்புவித்தால், குடும்பத்திற்கே 21 வகையான அசைவ விருந்து இலவசமாக வழங்கி வருகிறார்.
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நிரூபன் ஞானபானு, அமெரிக்காவில் 6 ஆண்டுகளாக சமையல் கலை வல்லுனராக பணியாற்றி உள்ளார். தற்போது சொந்த ஊரில் ஜல்லிகட்டு என்ற பெயரில் உணவகம் ஒன்றை நிரூபன் நடத்தி வருகிறார். தமிழ் மீது பற்றுக்கொண்ட நிரூபன், திருக்குறளை போற்றவும், வளர்க்கவும் எண்ணி தனது உணவகத்தில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். தனது உணவகத்திற்கு வரும் குழந்தைகள், மாணவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, காடை தொக்கு மற்றும் நண்டு வறுவல், மீன், முட்டை என 21 வகையிலான மெகா அசைவ விருந்து இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதனை அறிந்த மாணவர்கள், குழந்தைகள் ஏராளமானோர் நிரூபன் உணவகத்திற்கு வந்து திருக்குறளை சரளமாக ஒப்புவித்து குடும்பத்துடன் அசைவ விருந்து சாப்பிட்டு செல்கின்றனர். குழந்தைகள் மற்றும் மாணவர்கள் சரளமாக திருக்குறலை ஒப்புவிப்பது காண்பேரை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.