காப்பீடு, ஊடகத் துறை ஆகியவற்றில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசு வரவேற்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். மக்களவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர் , வான் போக்குவரத்து துறை, ஊடகம், அனிமேஷன், விஷ்வல் எஃபக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் மற்றும் காப்பீடு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான பரிந்துரைகளை வரவேற்பதாக தெரிவித்தார்.
காப்பீட்டு இடைநிலை நிறுவனங்களில் 100 சதவீதம் அந்திய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அவர் கூறினார்.