ஆஸ்திரேலியாவில் 100 மீட்டர் நீளமுள்ள பீட்ஸா ஒன்று பிரபல உணவகத்தில் தயாரிக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது, அந்த பீட்ஸா எதற்காக தயாரிக்கப்பட்டது அதன் பின்னணி என்ன?
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிட்னி நகரத்தில் அமைந்துள்ள பெல்லெக்ரினி என்ற இத்தாலியன் உணவகத்தில் 50 ஊழியர்கள் இணைந்து, 5 மணி நேரத்தில் 100 மீட்டர் நீளமுள்ள பீட்ஸாவினை தயாரித்து சாதனை புரிந்துள்ளனர்.
400 கிலோ எடைக்கொண்ட இந்த பிரமாண்ட பீட்சாவினை சான் மர்சானோ (San Marzano) தக்காளி, சீஸ், துளசி, உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி 100 மீட்டர் நீளமுள்ள ராட்சத சுவையான பீட்ஸாவாக தயாரித்துள்ளனர். இந்த பீட்ஸா தயாரிப்பு குறித்து அந்த உணவக நிர்வாகம் கூறுகையில், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள தீயணைப்பு சேவைப் பிரிவுக்கு நிதிசேகரிப்பதற்காக இந்த பீட்ஸா தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
பின்னர் பிரமாண்ட பீட்ஸா விற்பனைக்காக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது, தொடர்ந்து தீயணைப்பு வீரருக்கு உதவும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பீட்சாவினை ஏராளமானோர் காசு கொடுத்து வாங்கியதோடு, தங்களது பாராட்டுக்களையும் அந்த உணவகத்திற்க்கு தெரிவித்துவருகின்றனர்.