100 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்வோர் மீது அபராதம் விதித்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பெரியகுளம் தென்கரை பகுதியிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கட்டில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் 1000 ரூபாய் அபராதமும் விதித்தனர். இந்த சோதனையில் 100 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version