100 நிமிடங்களில் 100 அறிவியல் பரிசோதனைகளை நிகழ்த்தி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை படைத்தார்.
கரூரை அடுத்த வெள்ளியனை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் பிரிவில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தனபால். 10 ஆண்டுகளில் 351 மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக சான்று பெற செய்த இவர், மூன்று மாணவர்களை சர்வதேச அளவில் ஜப்பான், பின்லாந்து, சுவீடன் ஆகிய மேலை நாடுகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் மாணவர்களோடு அறிவியல் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது உட்பட 45 விருதுகளை இவர் பெற்றுள்ளார். இந்தநிலையில், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தங்கவேல், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் முன்னிலையில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்து 100 நிமிடங்களில் 100 புதிய அறிவியல் பரிசோதனைகளை செய்து காட்டி புதிய சாதனை படைத்த தனபால், கலாம் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.