100 கோடி தடுப்பூசி இந்தியா திட்டம்!!

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து உருவாக்கப்பட்ட பின் மொத்தமாக 100 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இந்தியா திட்டமிட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட் உடன் ஒப்பந்த செய்த நிறுவனம் எது… விரிவாக பார்கலாம் இந்த தொகுப்பில்…

கொரோனாவிற்கு எப்போது தடுப்பூசி உருவாக்கப்படும் என்று உலக நாடுகள் மிக தீவிரமாக எதிர்பார்க்க தொடங்கியுள்ள நிலையில், 120க்கும் அதிகமான நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்துகளை சோதனன செய்து வருகிறது.

அந்த வரிசையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ChAdOx1 nCoV-19 என்ற தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. தடுப்பூசி சோதனையில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையில் வெற்றியை ஈட்டியுள்ள ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) தனது மருந்து உற்பத்திக்காக இந்தியாவை நாடியுள்ளது.

இந்தியாவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உடன் இணைந்து மருந்து உற்பத்தியை தொடங்கவுள்ள அந்நிறுவனம், ஆக்ஸ்போர்ட் மருந்தை ஆகஸ்ட் மாதம் மனிதர்கர்ள் மீது சோதனை செய்ய உள்ளதாகவும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் முதல் மாதம் 7 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய உள்ளதாகவும், நடப்பாண்டு இறுதிக்குள், 10 கோடியாக மாதத்திற்கு அதிகப்படுத்துவோம் என்றும் ஆஸ்டெராசெனெகா தெரிவித்துள்ளது. இந்தியாவும் , உலக சுகாதார மையமும் அனுமதி கொடுத்தவுடன் கற்பனை செய்து பார்க்க முடியாத வேகத்தில் இந்த பணிகள் இருக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஒரு பக்கம் சீனா கொரோனா தடுப்பு மருந்து சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னொரு பக்கம் ரஷ்யா மருந்தை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர போகிறோம் என்று அறிவித்துள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியாவின் ஒரு நிறுவனம் ஆக்ஸ்போர்ட் உடன் ஒப்பந்தம் செய்து அதன் மூலம் 100 கோடி மருந்துகளை உற்பத்தி செய்யவிருப்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version