“PUBG” விளையாட்டில் ஏமாற்றினால் 10 ஆண்டுகள் தடை

பிரபல ஆன்லைன் விளையாட்டான PUBG உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த விளையாட்டை நேரம் காலம் இல்லாமல் விளையாடும் நபர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். PUBG வெற்றியின் அடையாளமாக கருதப்படும் “chicken dinner”ஐ அடைய குறுக்கு வழியை சிலர் பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இந்த புகார்கள் மீது PUBG குழு தற்போது நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு PUBG-யில் ஏமாற்று வழியில் ஈடுபட்ட 3500 நபர்களின் ஐ.டி.க்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் PUBGயில் ஹேக்கர்களின் தலையீடு காரணமாக விளையாடுபவர்களும் தங்களை மறந்து குறுக்கு வழியில் ஈடுபட தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குற்றத்திற்கு விளையாடுபவர்கள் சொல்லும் எந்த காரணத்தையும் PUBG குழு ஏற்கவில்லை.

தொடர்ந்து அதிகரித்த புகார்கள் காரணமாகவே இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பப்ஜி மொபைல் ஆப்பில் in-game Ban Notice என்கிற பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஹேக்கிங் தண்டனை குறித்த தகவல்களும், தடை செய்யப்பட்ட ஐ.டி.க்கள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளது.

விளையாட்டில் வெற்றியோ, தோல்வியோ…குறுக்கு வழியை உபயோகிக்காமல் நேர்மையாக விளையாடுங்கள்…

Exit mobile version