சென்னை கிண்டி மருந்து ஆய்வகத்தில், பத்து ஆண்டுகளுக்கு பின் BCG தடுப்பு மருந்து உற்பத்தி தொடங்கியது.
காசநோய் வராமல் தடுப்பதற்காக BCG தடுப்பு மருந்து, பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்திய அளவில் மொத்த தேவையில், 50 சதவீத மருந்தை கிண்டி ஆய்வகம் தயாரித்து வந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு உட்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாததால், மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது உரிய அனுமதி பெற்று மீண்டும் மருந்து உற்பத்தி தொடங்கியுள்ளது. தற்போது 4 லட்சத்து 20 ஆயிரம் பிசிஜி தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும், உற்பத்தியை மீண்டும் அரசு தொடங்கியுள்ளதால் மருந்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிசிஜி தடுப்பு மருந்து மையத்தின் ஆலோசகர் சேகர், ஜூலை மாதத்தில் இருந்து 2021 மார்ச் மாதத்துக்குள், 170 லட்சம் மருந்துகள் தயாரித்து வழங்கப்பட உள்ளதாக கூறினார்.