ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 10டன் மாம்பழங்கள் பறிமுதல்

கமுதியில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 10 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 3 மாம்பழ கிடங்கில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரசாயனம் தெளித்து பழுக்கவைக்கப்பட்ட 10 டன் மாம்பழங்களை கைப்பற்றி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அழித்தனர். மேலும் செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்கப்படும் மாம்பழங்கள் குறித்து தகவல் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Exit mobile version